சவுதி அரேபியாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 70 பேர் வரை இதில் காயமடைந்துள்ளனர்.

386

 

சவுதி அரேபியாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 70 பேர் வரை இதில் காயமடைந்துள்ளனர்.

சவுதியின் கிழக்கில் உள்ள குவாடிப் மாகாணத்தின் அல்-குவாதி கிராமத்தில் அமைந்துள்ள இமாம் அலி பள்ளி வாசலிலேயே குண்டு வெடித்துள்ளது.

சம்பவத்தின் போது சுமார் 150 பேர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு தற்கொலைக் குண்டு தாக்குதல் எனவும்  ‘சித்தே’ பிரிவினரின் பள்ளிவாசலெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அபு அலி அல்-ஷாரானி என்ற இளைஞரே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது படமும் ஐ.எஸ் ஆதரவு தளமொன்றில் பகிரப்பட்டுள்ளது.

 

SHARE