சாட்சியமளிக்க அஞ்சப் போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா

360

erik-solheim-norway-peace-killer (1)

ஐக்கிய நாடுகள் யுத்தக் குற்ற விசாரணைகளில் சாட்சியமளிக்க அஞ்சப் போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரையும் சுட்டுக் கொலை செய்யுமாறு தாம் உத்தரவிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சிமளிக்கும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த எச்சரிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அஞ்சாமல் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE