சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

311
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம் தாமதிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

SHARE