‘சாப்ட்’ ஆன வில்லன் என்றால், நடிக்க தயாராக இருக்கிறேன்…’ – சத்யராஜ்

191

தமிழ் சினிமாவில், வில்லனாக நடித்து பிரபலமாகி, அதன் பின், ‘ஹீரோ’ ஆனவர் தான், சத்யராஜ். சமீப காலமாக, குணச்சித்திர வேடங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். கமல் நடித்து வரும், இந்தியன் – 2 படத்தில், கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்க, சத்யராஜை அணுகினர்.

‘தற்போது, ‘சென்டிமென்ட்’ ஆன கதாபாத்திரங்கள் மூலம் இ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறேன். இந்நிலையில், கொடூரமான வில்லனாக நடித்தால் அந்த, ‘சென்டிமென்ட்’ இடம் பறி போய்விடும். அதிகப்படியான கொடூரத்தனம் இல்லாத, ‘சாப்ட்’ ஆன வில்லன் என்றால், நடிக்க தயாராக இருக்கிறேன்…’ என்று சொல்லி, இந்தியன் – 2 படத்தில் நடிக்க, மறுத்துள்ளார்.

SHARE