சாம்பியன் அணியாக இருந்தால் வீழ்த்த முடியாதா என்ன? மிதாலி ராஜ்

255

அவுஸ்திரேலிய அணி சாம்பியன் அணியாக இருந்தால், வீழ்த்த முடியாதா என்ன என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மகளிருக்கான உலக்கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் அடுத்த அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இத்தொடர் குறித்து இந்திய அணியின் தலைவர் மிதாலி ராஜ் கூறுகையில், அரையிறுதி போட்டி நடக்கவுள்ள டெர்பி மைதானத்தில், அதிக லீக் ஆட்டங்கள் விளையாடியுள்ளோம்.

இதனால் தங்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. அவுஸ்திரேலியா அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான விடயம் அல்ல, இருப்பினும் முயற்சி செய்வோம்.

சாம்பியன் அணியாக இருந்தால் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியாதா என்ன? தோல்விக்கு அந்தணி மட்டும் விதிவிலக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

SHARE