சாய்னா நேவாலிற்கு அனில் கும்ப்ளே பாராட்டு

188
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொண்டார். கடுமையாகப் போராடிய சாய்னா 16-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் சாய்னா வெள்ளி பதக்கத்துடன் திருப்பதியடைந்தார்.

இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும் சாய்னாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்தில் “சிறப்பாக விளையாடியதுடன், இறுதி வரை போராடியது நல்ல விஷயம். ஆனால் இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இல்லை. மேலும் இன்று சிறப்பாக விளையாடிய வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்” என சாய்னாவை பாராட்டியுள்ளார்

SHARE