அச்சுவேலி பொலிசாரின் பொறுப்பாற்ற நடத்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி.

185
பொறுப்பற்ற நடத்தையால் மனஉளைச்சலிற்குள்ளான சிறுமி பாடசாலை செல்ல மறுத்து வருவதையும் வெளிப்படுத்தியிருந்தோம்.aaa_zpscf36e1cc dananjayan-050514-600
பல வாரங்கள் கடந்தும் இதேநிலைமை நீடிப்பதுடன், சிறுமியின் கல்வி நடவடிக்கை கிட்டத்தட்ட பாதிப்படையும் நிலைக்கு சென்றுவிட்டதென்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற நடத்தைக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் மீன்வியாபாரியினால் சீரழிக்கப்பட்டார் என்ற வதந்தியை, சிறுமியின் குடும்பத்துடன் பகை கொண்டிருந்த ஒருவர் பரப்பினார்.

அந்த செய்தி கிராமத்தில் காட்டுத்தீயாகவும் பரவியது. இதனை நம்பிய, பல இணையத்தளங்களும் அதனை நன்றாக சோடித்து செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த தகவல் பொலிசாரின் காதுகளிற்கும் எட்டியது. அச்சுவேலி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆர்வக்கோளாறு காரணமான, எந்தவிதமான முறைப்பாடு பதிவு செய்யப்படாத நிலையிலும், நிதிமன்ற உத்தரவு பெறப்படாமலும் சிறுமியை வைத்தியப்பரிசோதனைக்கு அனுமதித்தார்.

வைத்தியப்பரிசோதனையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாகவில்லையென்ற உண்மை புலப்பட்டது. பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் மன்னிப்பு கோரி, சிறுமியை ஒப்படைத்திருந்தனர்.

பொலிசாரின இந்த பொறுப்பற்ற நடத்தையால் சிறுமி மனஉளைச்சலிற்குள்ளாகியுள்ளதுடன், பாடசாலை செல்ல மறுத்து வருகிறார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

SHARE