சிகரம் சரிந்தது… ரஜினி, கமலை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலசந்தர் மரணம்…..

420

 

தமிழ் சினிமா இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இன்று மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக கருதப்படும் ரஜினி, கமல் போன்ற பலரை அறிமுகப்படுத்தியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்.

தாதா பால்சாகேப், பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற எண்ணற்ற விருதுகளை வாங்கியவர். தமிழ் சினிமாவின் சகாப்தமாக கருதப்படும் பாலச்சந்தர் அவர்கள் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து நல்ல முன்னேற்றம் அடைந்து வந்தது. இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

k.balachander

SHARE