சிக்ஸர் மழை பொழிந்த வீரர்! 30 பந்தில் 74 ரன் விளாசல்

25

 

SA20 போட்டியில் டர்பன் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் அணியை வீழ்த்தியது.

ஹென்றிச் கிளாசென் 74
The Wanderers மைதானத்தில் நடந்த போட்டியில், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய டர்பன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் குவித்தது. ஹென்றிச் கிளாசென் 30 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.

வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.

ஜூனியர் டாலா 4 விக்கெட்
பின்னர் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக மொயீன் அலி 30 (26) ஓட்டங்களும், ஹென்றிக்ஸ் 27 (24) ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டர்பன் இமாலய வெற்றி பெற்றது.

ஜோபர்க் அணியின் ஜூனியர் டாலா 4 விக்கெட்டுகளும், நவீன் மற்றும் பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

SHARE