சிங்களவனோடு‬ சேர்ந்து இப்போது சீனத்தவனும் தமிழனைத் தாக்க ஆரம்பித்து விட்டான்

467

 

மலேசியாவில் தமிழர்கள் மீது சரமாரித் தாக்குதல்
மலேசியாவில் சீனர்களால் தாக்கப்பட்ட தமிழர். நேற்றைய தினம் மலேசியாவில் வாடகை காரை ஓட்டிச் சென்ற கீழே படத்தில் உள்ள தமிழரானவர் தனக்கு முன்னால் பாதை விடாமல் சென்று கொண்டிருந்த BMW காரினை பாதை விடுவதற்காக தனது காரின் மூலம் ஒலி எழுப்பியுள்ளார்.

11046283_383905188473979_389698848520098767_n

ஆனால், BMW காரில் சென்றவர்களோ பாதை விடாமல் சென்றது மட்டுமல்லாமல் ஒலி எழுப்பியதற்காக தமது காரை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு இறங்கி வந்த இரு சீனர்கள் நமது தமிழ் உறவான இவரைப் பார்த்து “நீ தமிழனா” என்று கேட்டு விட்டு மிகவும் மோசமாக தாக்கியுள்ளனர்.

இவரைத் தாக்குகின்ற சம்பவத்தை அந்த வழியாக வந்த மலேசியா காவல்துறையினரோ இவரை சீனர்கள் தாக்கி முடிந்து அவர்கள் போகும் வரையும் நின்று வேடிக்கை பார்த்து விட்டு காவல்துறையினரும் கிளம்பி விட்டனர்.

இதனால் கோபமடைந்த தமிழ் உறவோ… தன்னை இரு சீனர்கள் போட்டு மிகவும் மோசமாக தாக்குவதை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்து விட்டு போன காவல்துறையினரின் வாகனத்தை முந்திச் சென்று அவர்களின் வாகனத்தின் முன்னால் நிறுத்தி “தன்னை இரு சீனர்கள் தாக்கியதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதோடு மட்டுமல்லாமல் தன்னை மருத்துவமனை கூட அழைத்துச் செல்லாமல் தட்டிக்கழித்து விட்டுச் சென்ற காவல்துறையைக் கண்டித்து அவர்களைக் கைது செய்து தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வரையிலும் இத் தெருவிலேயே நிற்பேன்” என குருதி ஓட ஓட தனக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தெருவிலேயே நின்றுள்ளார்.

‪#‎சிங்களவனோடு‬ சேர்ந்து இப்போது சீனத்தவனும் தமிழனைத் தாக்க ஆரம்பித்து விட்டான்

SHARE