சிங்களவர்கள் விஜயன் காலத்திலிருந்தே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது

351

47

புதிய அரசும் எங்களை ஏமாற்றுகிறதா? முதலமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கேள்வி!

விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களையும் இராணுவம் கையகப்படுத்தியே வைத்துள்ளது. இதனால் தமது எதிர்பார்ப்புக்கள் சிதைந்துவிட்டன. 25 வருடங்களாக ஏதிலிகளாகத் திரிந்த எம்மை இந்த அரசாங்கமும் ஏமாற்றுகிறதா? இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் குழுவிடம் தமது கவலைகளைக் கொட்டித் தீர்த்தனர் வலி.வடக்கு மக்கள்.4

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் வயாவிளான் பகுதியில் அண்மையில் மக்கள் பார்வையிட அனுமதித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதிக்குச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அடங்கிய குழுவினர் மக்களுடன் கலந்துரையாடினர்.

ஒட்டகப்புலம் தேவாலயத்தில் மக்களையும், கிறிஸ்தவ மத தலைவர்களையும் சந்தித்து மக்கள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர். இதன்போது மேற்படி பகுதியில் 197 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டபோதும் அந்தளவு நிலம் விடுவிக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 30 ஏக்கர் வரையிலான காணிகள் 22 குடும்பங்களுக்குச் சொந்தமானவை என்றும், ஏனைய 238 குடும்பங்களுக்குரிய விவசாய காணிகள் தவிர்ந்த வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தேவாலயங்கள் போன்றன தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளன எனவும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அச்சுவேலி – பலாலி இடையிலான போக்குவரத்து வீதி வயாவிளான் பகுதியுடன் மூடப்பட்டிருக்கின்றது. இதனால் பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் மீள்குடியேறிய மக்கள் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டிய பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை போன்றனவற்றுக்கு செல்ல சிரமமேற்றடும் எனவும் தெரிவித்தனர்.

சிங்களவர்கள் விஜயன் காலத்திலிருந்தே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை இதைக் கூட இன்றும் எமது தலைவர்கள் புரிந்துகொள்ளமுடியாததால் தான் தோற்றுப்போன தமிழர் தலைமைகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றர்கள் என்பது தான் யதார்த்தம்.

S J V செல்வநாயகம் அவர்கள் எமது அரசியல் தலைமைகள் அனைவரிடமிருந்து வேறுபட்ட பொழுதிலும் 1967 ஆம் ஆண்டு D S சேனநாயக்கா அரசாங்கத்திற்கு ஆதரவளித்த போது DS சேனநாயக்கா அவர்களினால் தந்தை செல்வா அவர்களுக்கு உறுதியளித்தவற்றை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையால் அரசைக் கலைப்பதற்கு DS சேனநாயக்கா முன்வந்தபோது அது தேவையில்லையென்றும் தாங்கள் தங்களுடைய உறுதிமொழியைக் காப்பாற்றுவோம் என்று கூறி தானும் ஒரு கிறிஸ்தவன் என்பதை உறுதிப்படுத்தியவேளை தனது தலைமையின் தோல்வியை அந்த உறுதிமொழியின் மூலம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இன்றைய சூழ்நிலையில் எமது மக்கள் 75 வருட காலமாக அநுபவித்து வரும் தாங்கொணாத துன்பதுயரங்களிலிருந்தும் என்றைக்குமே ஈடு செய்யமுடியாத இழப்புக்களை இழந்து நிற்கும் எம்மக்களை காப்பாற்றுவதற்காக ஆண்டவனால் அனுப்பிவைக்கப்பட்ட “இறைதூதர்”ரும் நீதியரசருமான எமது முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஐயா அவர்களை ஈழதேச மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் அளவு கடந்த எதிர்பார்ப்புக்களுடனும் எந்தவொரு தமிழ்த் தலைமைகளுக்குமே இதுவரை காலமும் வழங்காத வரலாறு காணாத ஆதரவை… வெற்றியாக வழங்கி எள்ளாலனுக்குப் பின்பான ஒரு “வெற்றிபெற்ற தலைமை” யாக வரவேண்டும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்

SHARE