சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி இனக் கலவரம் என்ற போர்வையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு பாரிய சதி இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் இலங்கையில் நிகழ்ந்தது-இனியும் இந்தியாவை TNA நம்புவது முட்டாள்தனம்

452

 

தமிழகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டங்களும், தமிழக முதல்வர் அவர்களது சட்டசபைத் தீர்மானங்களும் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கி வருகின்றது.sonia singh rajapakse

வெறும் எட்டே பேர் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தை தி.மு.க.வினருக்கு ஏற்படுத்தியது. தி.மு.க.வின் வெளியேற்றத்தை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போதைய நிலையில் குறித்த காலத்திலோ, அதற்கு முன்பாகவோ நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை மீளக் கைப்பற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் தெரிவான 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை வழங்கி இருந்தனர்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பான எவரும் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் அறவே கிடையாது.

இந்த அச்சம் காரணமாகவே, தமிழக காங்கிரஸ் கட்சியினர் மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மாணவர்களது நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களது வன்முறையற்ற போராட்டங்களுக்கு தமிழக அரசும் இடையூறுகள் ஏற்படுத்தாத வண்ணம் தவிர்த்துக் கொள்கின்றது.

இதனால், மாணவர்கள் போராட்டத்தை முற்றாகத் தடுப்பதற்காக, அவர்களை வன்முறைப் பாதைக்கு வலிந்து இழுப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற போதும், மாணவர்கள் தொடர்ந்தும் அமைதி வழிகளிலேயே போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது, காங்கிரஸ் கட்சியினர் எதிர்பாராதது.

எனவே, மாணவர்களது போராட்டம் தவறானது என்று அவர்கள் மீது பழியினைப் போட்டு, தங்களது அரசியல் சரிவினைச் சரி செய்வதற்காக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இன்னொரு சதித் திட்டத்தை அரங்கேற்ற உள்ளதாக தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளாகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலை விடவும் கொடூரமான இந்தத் திட்டம் உண்மையில் அரங்கேற்றப்படுமானால், இலங்கைத் தீவில் இன்னொரு தமிழின அழிப்பாகவே அது இருக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி இனக் கலவரம் என்ற போர்வையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு பாரிய சதி இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் இலங்கையில் நிகழ்த்தப்படும் அபாயம் உள்ளது என்பதே அந்த எச்சரிக்கையின் உள்ளடக்கம்.

கடந்த சில நாட்களாக, இனக் கலவரம் குறித்த சொல்லாடல்கள் சிங்கள ஆட்சியாளர்களாலும், அவர்களது பங்களிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவாலும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்கிலான இந்தச் சொல்லாடல், மறைமுகமாக சிங்கள இனவாத்தத்தை உசுப்பேற்றுவதற்கானதாகவும் உள்ளது.

இன அழிப்பிற்குள்ளான தமிழீழ மக்களுக்கு நீதி கோரும் தமிழக மாணவர்களது தொடர் போராட்டத்தையும், தமிழக அரசின் தீர்மானங்களையும் சிங்கள தேசியவாதத்திற்கான அச்சுறுத்தலாகக் காண்பிப்பதன் மூலம் 83 ற்கு ஒப்பான கொதி நிலையை சிங்கள இனவாதிகள் மத்தியில் உருவாக்குவதன் மூலம் இந்தச் சதி அரங்கேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை நிராகரிக்க முடியாது. இதையே, இந்திய காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்க்கின்றது.

Sonia Gandhi

இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு இனக் கலவரம் நடைபெற்றால், அதற்கான பழியினைத் தமிழக மாணவர்கள் மீதும், பொறுப்பினை தமிழக அரசு மீதும் சுமத்தி விடுவதன் மூலம் தமிழக அரசியல் கள நிலைமையில் தமக்குச் சார்பான மாற்றத்தை உருவாக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகின்றது. அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளது.

மாணவர்களது அவசரமான, நிதானமற்ற போராட்டங்கள் மூலமாகவே இலங்கையில் தமிழ் மக்கள் பாதிப்பிற்குள்ளானார்கள் என்றும், தமிழக முதல்வரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினாலேயே தமிழர்கள் மீண்டும் இப்படியொரு அழிவினை எதிர்கொண்டார்கள் என்றும் குற்றம் சுமத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தன்னைச் சரி செய்ய நினைக்கின்றது.

இது குறித்து, அனைத்துத் தமிழர்களும் விழிப்பாக இருப்பதுடன், தமிழீழ மக்களை இன்னொரு இன அழிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்பதே தற்போதைய நிலையில் எமது அவசர வேண்டுகோளாக உள்ளது.

SHARE