சிங்கள பேரினவாதம் தமது இனவாத கருத்துக்களை நஞ்சாக கக்கி வருகின்றனர். வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கவலை.

338
விடுதலைப்புலிகளின் பின் தமிழர் மீதான அடக்குமுறைகளே சிங்கள பேரினவாதிகளின் அரசியலாகியுள்ளது. வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கவலை.
unnamed (10)
 
பொதுத்தேர்தல் நெருங்கி வர வர தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தாமும் செய்து வருகிறோம் என வெளிப்படுத்த முற்படுகின்றனர் சிங்கள பேரினவாதிகள், ராணுவத்தை விலக்க மாட்டோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டோம், ராணுவ காணி அபகரிப்புகளில் தலையிடமாட்டோம், போர்குற்றங்களை ஏற்கமாட்டோம், இன படுகொலை செய்தவர்களை காட்டிக் கொடுக்கமாட்டோம், ஐ. நா சபையை வரவிடமாட்டோம், சர்வதேச விசாரணையை செய்ய விடமாட்டோம் என கூக்குரல் இட்டு வருகிறது சிங்கள பேரினவாதம்.
இனவாதிகள் தமது இனவாத கருத்துக்களை நஞ்சாக கக்கி வருகின்றனர். அதன் மூலம் அரசியல் அறுவடை செய்யலாம் என பகல் கனவு கண்டு வருகின்றனர். இனவாத சிந்தனையுடன் முழுக்க முழுக்க செயல்பட்ட ராஜபக்ச அரசுக்கு என்ன நடந்தது என்பதை தற்சமயம் இவர்களும் சிந்திக்க தொடங்கவேண்டும். இல்லையேல் அவர்களின் தீய எண்ணங்களுக்கு அவர்களே தீமையை அறுவடை செய்யவேண்டிவரும்.
ஒரு வித்தியாவின் பிரச்சனையை வைத்துக் கொண்டு திரைமறைவில் சிலரால் உருவாக்கிவிட்ட வன்முறையை காரணமாக்கி மீண்டும் ராணுவத்தின் கைகளில் யாழ்ப்பாணம் முடக்கப்பட்டது. இதன் மூலம் தனது கெட்டிக்கார தனத்தை பறை சாற்றி யாழ் மக்களின் மீதான தமது அடக்குமுறை சிந்தனையை வெளிப்படுத்தி சிங்கள தேசத்திற்கு தேர்தல் நேரத்தில் ஒரு செய்தியை சொல்ல முயல்கிறதா இந்த நல்லாட்சி அரசு என சந்தேகம் கொள்ள வைக்கிறது. விடுதலைப்புலிகளின் அழிவுக்கு பின் தமிழர் மீதான அடக்குமுறைகளே சிங்கள பேரினவாதிகளின் அரசியலாகியுள்ளது.
வடமாகாணத்தின் பாதுகாப்புக்கு பொறுப்புதாரியாக ஒரு பகுதியேனும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் உள்ளபோது அவரிடம் எந்த விதப்புரைகளும் பெறப்படாது இந்த அரசு செயல்பட்ட விதம் ஏற்ககூடியதல்ல.
காலத்திற்கு காலம் மாறிவரும் பேரினவாத அரசுகளுக்கு குடை பிடிக்கவும், பரிவாரம் வீசவும் புதிது புதிதாக பணத்திற்கும், பதவிக்கும் விலைபோகும் தமிழினத்தவர்களுக்கு எமது மண்ணில் குறைவில்லை. அதனால் தான் மாறி மாறி வரும் அரசுகளும் எமது மக்களின் மீது தமது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முற்படுகின்றனர். முஸ்லீம் இனம் முஸ்லீம்களாக உள்ளது போல் தமிழர்களும் தமிழர்களாக இருக்க பழகி கொள்ளவேண்டும். இல்லாதவரை எமது மக்கள் மீதான அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

 

SHARE