சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானதுஅரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு – மனோ கணேசன்

507
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கால பொது அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்ளக் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிக்க சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிந்து அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் மட்டும் இலக்கினை எட்டிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொது ஜனாதிபதி வேட்பாளராக, சந்திரிக்கா, சஜித் பிரமேதாச,  மாதுலுவோ சோபித தேரர், சரத் பொன்சேகா, ஷிரானி பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க என பலரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவளிக்கக் கூடிய தரப்பினருக்கே ஆதரவளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE