சிங்காரவேலன் விஜய்யை சந்தித்தற்கு இது தான் காரணம் என்று கூறியுள்ளார்

339

லிங்கா படத்தின் பிரச்சனையில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இதில் விஜய்யின் பெயரை சிலர் முன்னிறுத்தி செயல்படுவது, இளைய தளபதியை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளதாம்.

இதற்கு விளக்கம் அளிக்க சிங்காரவேலன் விஜய்யிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர் புலி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வர சொல்லியுள்ளார். அவர் சென்ற நேரத்தில் தான் படக்குழுவினருக்கு விஜய் பிரியாணி விருந்து கொடுத்து வந்துள்ளார்.

அவரை சந்தித்த பிறகு சிங்காரவேலன் பேசுகையில் ‘ நாங்கள் போராட்டத்தின் போது எந்த ஒரு இடத்திலும் விஜய்யின் பெயரை கூறவே இல்லை, ஆனால், சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பிவிட்டனர்.

இதை அவரிடம் கூறிய போது, ‘சரி விடுங்க..பரவாயில்லை’ என்று கூறினார். மேலும், விஜய் எல்லோருக்கும் பிடித்த நடிகர், அதனால் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அதை வைத்து தற்போது மீண்டும் பல வதந்திகளை கிளப்ப ஆரம்பித்து விட்டனர்’ என்று கூறியுள்ளார்.

SHARE