சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி வழங்கிவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

360

 

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி வழங்கிவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7)

பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இந்துக்களுக்கு நேற்று ஞாயிறுக்கிழமை திருக்கேதீஸ்வரம்இ செல்வநகர்இ தோட்டக்காடு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பரிசாக வேஷ்டிசால்வைகள் வழங்கியதோடுஇ வடக்கு மாகாணத்திலும் இலங்கையின் அனைத்து பாகங்களிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் பிறக்கின்ற மன்மத ஆண்டு சீரும் சிறப்புமாக அமைய இறைவனை பிரார்த்தித்து தனது உள்ளத்திலிருந்து விசேட அன்புநிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் திருக்கேதீஸ்வர கண்ணன் குருக்கள் இ புலவர் ஐயா அவர்களும் கலந்து மக்களுக்கு ஆசியுரையும் வழங்கினர்.

Mark Anand – Mannar

SHARE