சினிமாவுக்கு வருகிறார் அர்ச்சனா!

581

தமிழ் சினிமாவில் மூன்று தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த அர்ச்சனாவைத் தெரியும். இப்போது அடுத்து ஒரு அர்ச்சனா சினிமாவுக்கு வருகிறார். இவர் சின்னத்திரை அர்ச்சனா. தொகுப்பாளராகவும், நடிகையாகவும் கலக்கிய அர்ச்சனா சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது விஜய் டி.வியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி 30 வாரங்களை தாண்டிவிட்ட நிலையில் பல திரை நட்சத்திரங்களின் கல்யாண நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும்போது கலந்து கொண்ட நடிகர்களும், இயக்குனர்களும் நீங்க சினிமாவுக்கு வரலாமே என்று கொளுத்திப்போட அர்ச்சனாவுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டது.
இதுபற்றி அவர் கூறியதாவது: “நம்ம வீட்டு கல்யாணம் ரொம்பவே சுவாரஸ்யமான நிகழ்ச்சி. இன்னும் நிறைய சினிமா நட்சத்திரங்களை கலாட்ட பண்ண ஆசையாக இருக்கிறது. இப்போது சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கியிருக்கிறது. நிறைய கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ட்ரி பவர்புல்லாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் வெள்ளித்திரையில் அர்ச்சனாவை பார்க்க தயாராகுங்கள்” என்கிறார் அர்ச்சனா.
SHARE