சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை கலைஞன் நடிகர் விவேக்.. வாழ்க்கை வரலாற்று

38

 

திரையுலக வாழ்க்கையில் ஒருவரின் இடத்தை நிரப்ப மற்றொரு கலைஞன் கண்டிப்பாக வருவார். அதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம்.

ஆனால், இனி யார் வந்தாலும் இவருடைய இடத்தை துளி அளவு கூட நிறைவு செய்யவே முடியாது என்பது போல் வாழ்ந்துள்ளார் சின்னக் கலைவாணர் விவேக். அவரின் வாழ்க்கை வரலாறை தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

வாழ்க்கை வரலாற்று
கடந்த 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் விவேக். இவருடைய முழு பெயர் விவேகானந்தன். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தான் இவர் பிறந்த ஊர்.

விஜயலக்ஷ்மி மற்றும் சாந்தி இருவரும் விவேக் உடைய சகோதரிகள் ஆவார்கள். ஊட்டியில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டத்தையும் பெற்றார். தனது சிறு வயதிலேயே பரத நாட்டியம் காற்றுக்கொண்டார்.

அதே போல் ஆர்மோனியம், வயலின் மற்றும் தபேலா போன்ற இசை கருவிகளை வாசிப்பதில் வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலத்தில் பணியாற்றி வந்த விவேக், மதுரையில் நடைபெற்ற பரத நாட்டிய போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இதன் இறுதி போட்டி சென்னையில் நடைபெற்றது.

அங்கு வந்து போட்டியில் கலந்துகொண்ட விவேக்கிற்கு, கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்துள்ளது. விவேக்கின் நடனத்தையும், மிமிக்கிரி திறமையையும் பார்த்துவிட்டு 1987ஆம் ஆண்டு தன்னுடைய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் கே. பாலச்சந்தர்.

நடிகர் விவேக், அருள்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இதில் பிரசன்னா குமார் கடந்த 2015ஆம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 காலகட்டத்தின் ஆரம்பத்தில் துணை நடிகராக தமிழில் நடிக்க துவங்கினார். இதன்பின் தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து முன்னணி நட்சத்திரமாகவும் உயர்ந்தார்.

மக்களை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் வகையில் இருந்தது இவருடைய வசனங்கள்.

புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள், சிவாஜி, குருவி, அந்நியன், பேரழகன் உள்ளிட்ட படங்களை இவருக்காகவே பார்க்கலாம்.

அப்துல் கலாம் பாதியில் பயணித்து வந்த இவர் ஒரு கோடி மரங்களை நடுவேன் என சபதம் எடுத்திருந்தார். ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2021ஆம் ஏப்ரல் மாதம் மரணடைந்த விவேக் தனது வாழ்நாளில் 33.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்கிய விருதுகள்
பிலிம்பேர் விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – ரன்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – சாமி
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – பேரழகன்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – சிவாஜி
தமிழக அரசு விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது– உன்னருகே நான்னிருந்தால்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – ரன்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – பார்த்திபன் கனவு
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – சிவாஜி
மற்ற விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
சிறப்பு சான்றாயர் விருது – ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
சிறந்த ஆண் நகைச்சுவை விருது – எடிசன் விருதுகள்
சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல் பண்பலை வானொலி விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – (ITFA)
நன்மதிப்பு

பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா

SHARE