சிரியாவின் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

577
சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டு போராளிகள் கடந்த 3 வருட காலமாக உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர்.

ஆசாத்தை பதவி விலகக் கோரி புரட்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள், முக்கிய நகமான ஹோம்ஸை கைபற்றி, இராணுவத்துக்கு சொந்தமான இடங்களை தகர்த்து எறிந்தனர்.

இந்நிலையில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கு கடும் போர் நடந்ததால், இந்த நகரைவிட்டு லட்சகணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர்.

இதன்பின் கடந்த 3 வருட காலமாக போராளிகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதன் அடிப்படையில் ஹோம்ஸ் நகரில் முற்றுகையிட்டிருந்த ஆயிரக்கணக்கான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஹோம்ஸ்நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வரும் யூன் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே போராளிகள் சரணடைந்ததும், ஹோம்ஸ் நகரை ஒப்படைத்ததும் ஜனாதிபதி அசாத்திற்கு சாதகமாக உள்ளதென கருதப்படுகிறது.

SHARE