சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் ஆலிவுட் நடிகர்

303
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் மைக்கேல் என்ரைட் (51). இவர் ‘கரீபியன் பைரட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் குர்தீஸ் படைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் குர்தீஸ் படையினருடன் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் சிரியா புறப்பட்டு சென்றுள்ளார்.

சிரியாவில் அவர் வளைகுடா நாடுகளில் இருந்து ஒளிபரப்பிடும் அல்–ஆன் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த தகவலை அவர் வெளியிட்டார். மேலும் கூறும் போது, ‘‘என்னை குர்தீஸ் படை கூட்டமைப்பு அழைக்கவில்லை. மனிதாபிமானத்துக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, மனிதாபிமானம் விடுத்த அழைப்பின் பேரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட வந்து இருக்கிறேன். இங்கு வந்த நான் உடனே புறப்பட மாட்டேன். போரிட வந்து இருக்கிறேன். ஒரு வேளை போரில் நான் இறக்க நேரிடலாம்’’ என்றார்.

அது குறித்து அவர் தனது குடும்பத்தினருக்கு கடிதமும் எழுதியுள்ளார். நடிகர் மைக்கேல் என்ரைட் ராணுவத்தில் பணிபுரிந்ததில்லை. தற்போது சிரியாவில் இருக்கும் அவர் அங்குள்ள மலைகளில் குர்தீஸ் படையினருடன் தங்கியுள்ளார்

SHARE