கடைசியாக, கடந்த 3-ந் தேதி இங்கிலாந்து பிணைக்கைதியான டாக்சி டிரைவர் ஆலன் ஹென்னிங்கை (47 வயது) தலையை துண்டித்து படுகொலை செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவின் இறுதியில் தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள அமெரிக்கர் எட்வர்டு காஸ்சிக்கையும் காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆலன் ஹென்னிங்கின் படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு இங்கிலாந்து அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது நெருங்கிய உறவினர் காலின் லிவ்சே, அவரது குடும்ப நண்பர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, ஆலன் ஹென்னிங் படுகொலை வீடியோ வெளியான 12 மணி நேரத்தில், இங்கிலாந்து உளவு அமைப்புகளான எம் 15, எம் 16 மற்றும் ஜிசிஎச்கியூ ஆகியவற்றின் தலைவர்களை தனது ‘செக்கர்ஸ் கவுண்டி ரெட்ரீட்’ ஓய்விடத்துக்கு அழைத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை தலையை துண்டித்து கொலை செய்து வருகிற ஐ.எஸ். தீவிரவாதி ஜாணின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கொல்லவோ அல்லது உயிரோடு பிடிக்கவோ ஏற்றவகையில், தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்துமாறு உளவு அமைப்புகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த தகவலை லண்டனில் இருந்து வெளிவருகிற ‘தி சண்டே டைம்ஸ்’ ஏடு வெளியிட்டுள்ளது.