சிரியாவில் 3 மாதத்தில் அமெரிக்கா குண்டு வீச்சில் 1000 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

415

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். மேலும் பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட தீவிர தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழி தாக்குதல்களை தொடங்கியது. அமெரிக்காவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தி வருகிறது.

கடந்த செப்டம்பர் 23–ந்தேதி முதல் சிரியாவில் அமெரிக்கா தனது குண்டு வீச்சு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை அதாவது கடந்த 3 மாதங்களில் நடத்திய குண்டு வீச்சில் 1,171 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் 1119 பேர் தீவிரவாதிகள். இவர்களில் 1046 பேர் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆவர். 72 பேர் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்–நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 52 பேர் பொதுமக்கள்.

இந்த தகவலை சிரியா போர் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE