சிரேஷ்ட கல்விமான் ஜமீலின் மறைவுக்கு வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு அனுதாபம்.

361

 

சிரேஷ்ட கல்விமானும் சமூக ஆர்வலரும் புகழ்பூத்த எழுத்தாளருமான மர்கூம் எஸ்.எச்.எம். ஜமீலின் மறைவுக்கு வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு தனது ஆழ்ந்த அனுதாபாங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

unnamed (15)

வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது,

 

இலங்கை திருநாட்டில் இதுவரை காலமும் காண முடியாத இனி எப்போதும் கிடைக்கப் பெறாத அரும் பெரும் கல்விமான் மறைந்த ஜமீல் ஆவார். 1940 ல் சாய்ந்தமருது கிராமத்தில் பிறந்த இவர் கல்முனை பாத்திமா கல்லூரி, கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவருமாவார். பின்னர் பேராதனை பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற இவர் கொழும்பு பல்கலைகழகத்திலும் யாழ் பல்கலைகழகத்திலும்  இரட்டை முதுமாணி பபட்டங்களையும் பெற்றார். அத்துடன் ஐக்கிய இராட்சியத்தில் உள்ள சசக்ஸ் பல்கலைகழகத்தில் கல்வித்துறைசார் மற்றும் பல்கலைகழக நிர்வாகம் தொடர்பான பயிற்சியையும் பெற்றுக்கொண்டவர் இவராவார். அவ்வாறே, தனது பவள விழா காணும் வேளையில் நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு அவர் அற்றிச்சென்ற சேவைகள் எண்ணில் அடங்காதவை ஆகும்.

 

தனது எழுபத்தைந்து  வருட உலக வாழ்கையில் அவர் ஒரு சிறந்த பன்னூலாசிரியராகவும் ஆய்வாளராகவும் பேச்சாளராகவும் சிறந்த கல்வி ஆசானாகவும் அரச திணைக்களங்கள் பலவற்றிலும் சிரேஷ்ட பதவிகள் பலவற்றையும் வகித்து திறம்பட்ட முறையில் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாம் தந்த வழிமுறை சிறிதும் மாறாமல் சிறந்த தொளுகையாளராகவும் உண்மை பேசுபவராகவும் தானதர்மங்கள் செய்வதில் முன்னிற்பவராகவும் மற்றும் நல்லிதையம் கொண்டவராகவும் அவர் வாழ்ந்து வந்தமை இந்த நாட்டுமக்கள் அனைவரும் அறிந்தவையாகும்.

 

சிதைந்து போய்க்கொண்டிருந்த முஸ்லீம் சமூகத்தை ஒற்றுமை எனும் கையிற்றால் கட்டிப்போட்டவர். முஸ்லீம்களின் இருப்பை உரிமைப்படுத்தி மாவட்ட ரீதியாக ஆவணங்கள் பலவற்றை தயாரித்தவர். சென்ற ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அவரது பாராட்டு விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அங்கு வெளியிட்டு வைக்கப்பட்ட ஒரு கிராமத்து சிறுவனின் பயணம் எனும் நூலானது அவரது வரலாற்றுக்காவியமாகும்.

 

இதுவே அவரது இறுதிக் காவியமாக  அமைந்துவிட்டது பேரிழப்பே ஆகும். அவர் மரணிக்கும் வரையிலும் பல்வேறு உயர்பதவிகளும் அவரை தேடி வந்தன. சில தினங்களுக்கு முன்னர் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பேரவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டும் இருந்தார். அவரது இழப்பால் துன்புறும் மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தினர் அன்பர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் வடக்கு முஸ்லீம் பிரஜைகள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபாங்களை தெரிவித்துக்கொள்கிறது.

 

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தவுஸ் எனும் உயர்ந்த சுவன பதவியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றோம்.

 

ஏ.கே.எம். சியாத்

 

ஊடக இணைப்பாளர்.

வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு

தலைமைக்காரியாலயம் –மன்னார்.

 

 

SHARE