சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு மில்ரோய் இவ்வாறு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
மைத்திரி ஆட்சியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியில் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மைத்திரி அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் நாளையும் இந்த கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.