சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

385

 

வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 6ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்.

அவர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “நீலப்புலிகள்” என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களது வரலாறு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

பகை வாழும் குகை தேடி – வான்

கருவேங்கை பாய்ந்தது..

காற்றோடு வந்த சேதி உலக

மெங்கும் புது வரலாறெழுதியது..

நமனை அஞ்சிடா வீரம் வெல்ல

தலைவன் அணியின் வீரர் போயினர்..

விண்ணைச்சாடிக் காற்றில் கலந்த

ரூபன் அண்ணா சிரித்திரன் அண்ணா..

உங்கள் தாகம் வெல்லும் நாளில்

எங்கள் தேசம் விடியும் விடியும்!!

– See more at: http://www.asrilanka.com/2015/02/20/27950#sthash.TaGAAZiu.dpuf

SHARE