சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

144

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

ranil_sampanthan

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20ஆவது திருத்தச்சட்டம் குறித்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி இரவு 9.30மணி வரை இந்த விவாதம் நடைபெறும்.

நாளையும் தொடரவுள்ள இந்த விவாதத்தையடுத்து, நாளை நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்ரெம்பரில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் முன்னதாக கூறியிருந்தார்.

எனவே ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 52 தொடக்கம், 65 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE