சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைத்து நடக்க வேண்டும்

471

சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச விசாரணைக்குழு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது.

மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் உரையாற்றி இருந்த அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தூதுவர் கீத் ஹார்பர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரேரணை அடிப்படையில் விசாரணைக்குழுவை அமைத்து, விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைத்து நடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE