வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை நகரசபை முன்னாள் தலைவர் சஞ்சீவன் ஆகியோரும் சுமந்திரன் அவர்களுடன் உடன் சென்று தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், யாழ்.மாவட்ட வேட்பாளர் மாவை சேனாதிராசாவும் தனது குடும்பத்தினருடன் வாக்களித்துள்ளார்.
இதேவேளை, யாழ் மாவட்ட வேட்பாளர் ஈ.சரவணபவன் இன்று காலை 7.45 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கை செலுத்தியுள்ளார்.
சிறீதரன் கிளிநொச்சியில் தனது சொந்தக் கிராமத்தில் வாக்களிப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தனது சொந்த ஊரான கிளிநொச்சி, வட்டக்கச்சி, மாயவனூரிலுள்ள கிளி/மாயவனூர் வித்தியாலயம் வாக்களிப்பு நிலையத்திற்கு தனது பாரியாருடன் சென்று இன்று காலை 7.10 மணியளவில் வாக்களித்துள்ளார்.
தற்போதைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று தமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதற்காக வாக்களித்து வருகின்றார்கள்.