ஜனவரி-08 அன்று சிறீலங்காவின் 08வது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறவுள்ளது.
அத்தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் சிறீலங்காவின் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சிகளின் சார்பில் மைத்திரிபால சிறிசேன உள்பட 19 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
புல்டோசர் போல எதிரில் வரும் எல்லாவற்றையும் ஏறி மிதித்து நசுக்கிக்கொண்டு செல்லும் மஹிந்த ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது. எனவே ஆட்சி மாற்றம் பற்றி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில்,
சாதாரண பொதுஜனங்கள் ‘சரத் மனமேந்திர’வின் அம்பு வில்லு சின்னத்துக்கு குத்தி ‘மைத்திரிபால சிறிசேன’வின் அன்னப்பறவையை கொன்று விடக்கூடாது. வாக்குச்சாவடிக்கு போகும் வழியில் பெட்டிக்கடையில் தேநீர் குடிக்கும்போது ‘முனசிங்ஹ பேதுரு ஆராச்சி’யின் தேநீர் கோப்பை சின்னத்தையோ, வெற்றிலை சப்பும்போது ‘மஹிந்த ராஜபக்ஸ’வின் வெற்றிலை சின்னத்தையோ நினைக்கக்கூடாது. கண் பார்வைக்குறைபாடுடையவர்கள் ‘அநுருத்த பொல்கம்பல’வின் மூக்குக்கண்ணாடி சின்னத்துக்கு குத்திவிட்டு திரும்பக்கூடாது என்பதற்காக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்தில்,
வேட்பாளர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள் போட்டியிடும் சின்னங்களையும் அறியத்தருகின்றோம்.
01. அய்யத் முஹமட் இலியாஸ் – இரட்டைக்கொடி
02. இப்ராகிம் மிப்லார – வண்ணத்துப்பூச்சி
03. பிரசன்ன பிரியங்கர – கார்
04. விமல் சிந்தனகே – கிரிக்கெட் துடுப்பு மட்டை
05. ஸ்ரீதுங்க ஜயசூரிய – ஓட்டோ (முச்சக்கர வண்டி)
06. எம்.பீ. தெமின்முல்ல – சிறுவர் சேமிப்பு உண்டியல்
07. பால விகே சிறிவர்த்தன – கத்திரிக்கோல்
08. துமிந்த ஹமுவ – லாந்தர் (சிமினி விளக்கு)
09. மனமே பிரின்ஸ் சொலமன் அனுரலியானகே கங்காரு
10. மைத்திரிபால சிறிசேன – அன்னப்பறவை
11. முனசிங்ஹ பேதுரு ஆராச்சி – தேநீர் அருந்தும் கோப்பை
12. அநுருத்த பொல்கம்பல – மூக்குக்கண்ணாடி
13. பத்தரமுல்ல சீலரத்னதேரர் – உழவு மிசின் (ரைக்டர்)
14. சரத் மனமேந்திர – அம்பு வில்லு
15. ஆராச்சிகே ரத்நாயக்க சிறிசேன – ஒற்றைக்கொடி
16. மஹிந்த ராஜபக்ஸ – வெற்றிலை
17. நாமல் ராஜபக்ஸ – தொலைபேசி
18. சுந்தரம் மகேந்திரன் – மேசை
19. ஜயந்த குலதுங்க – கலப்பை
குறித்த ஒழுங்குமுறைப்படியே ஜனவரி-08 அன்று உங்கள் கையில் தரப்படும் வாக்குச்சீட்டும் அச்சிடப்பட்டிருக்கும். அந்த வாக்குச்சீட்டில்,
இரண்டு பிரதான வேட்பாளர்களான மைத்திரிபால சிறிசேன 10வது இடத்திலும், மஹிந்த ராஜபக்ஸ 16வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
அப்புறம் என்ன? உங்க இஸ்டப்படி குத்தோ குத்தோன்னு குத்தி, கிழி… கிழி… கிழின்னு கிழிச்சிர வேண்டியது தானே. மகா ஜனங்களே! வாக்குச்சீட்டையில்ல வேட்பாளர்கள.
செய்தியறிக்கையிடல்,
-கவரிமான்-