நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையோரான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மைச் சிங்களவர்கள் செறிந்து வாழும் தென்னிலங்கைத் தேர்தல் மாவட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தோல்வியுற்றார். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, திகாமடுல்ல, கண்டி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, மற்றும் கம்பஹா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன, அநுராதபுரம், குருநாகல், மாத்தளை, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, மெனராகலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மஹிந்த ராஜபக்ஷவை விட குறைந்த வாக்குகளையே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மைத் தரப்பினரது வாக்குகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவை விட சுமார் நாலரை லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று இந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றியீட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். –