சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை

451
சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை- படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
karainagar 588554521

காரைநகர் பகுதியில் 11வயது , 9 வயது சிறுமிகள் இருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று சந்தேகத்தின் பேரில் கடந்த 18ம் திகதி 7 கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 30ற்கு  மேற்பட்ட கடற்படையினர் அன்று மாலை அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தப்பட்டு 7பேர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி வழக்கு கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேகநபர்கள் 7பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு ஆட்பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 25ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

சந்தேக நபர்களின் உறவினர்கள் தங்களது கிராம சேவகரது கடிதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தே பிணையில் எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சிவில் பாதுகாப்பு படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது

சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை நைலோன் கயிற்றை கொண்டு, கழுத்தை இறுக்கி கொலை செய்த பின்னர், உடலை எரித்து விட்டு தப்பிச் சென்ற மற்றுமொரு சிவில் பாதுகாப்பு படை வீரர் முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். முந்தல் மங்கள எலிய பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணியாற்றி வந்த வீரரே இவரால் கொலை செய்யப்பட்டார்.

அனுராதபுரம் அசிரிகம கம்மிரிஸ்கஸ்வெவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 39 வயதான மொஹமட் சரீப் இட்ஷாக் என்ற இந்த சிவில் பாதுகாப்பு படை வீரர், நேற்று காலை பணிக்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் பணியாற்றிய 37 வயதான சிவில் பாதுகாப்பு படை வீரரே இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

TPN NEWS

SHARE