சிறுமி வன்புணர்ந்து படுகொலை: குடும்ப உறுப்பினர் மீது சந்தேகம்! 

322

பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள கொட்டதெனியாவ சிறுமியின் கொலையின் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. சம்பவத்தின் பின்னணியில் குடும்ப உறுப்பினர் ஒருவரே இருக்கிறார் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கொட்டதெனியாவ, படல்கம பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு காணாமல்போன சேயா சதேவ்மி என்ற 5 வயதுச் சிறுமி, கழுத்து இறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஓடையயான்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மருத்துவப் பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலைசெய்யப்பட்டடுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் பலகோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சிறுமியின் குடும்ப அங்கத்தவர் ஒருவர் மீதே பெரும்பாலானோரின் பார்வை திரும்பியுள்ளது. அவர் தொடர்பிலும் பொலிஸார் சல்லடையிட்டு வருகின்றனர்.

SHARE