சிறுவர்களை பலாத்காரம் செய்த மைக்கேல் ஜாக்சன்

298
உலக புகழ்பெற்ற நடன கலைஞரான மைக்கேல் ஜாக்சன் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.நடனத்தில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009ம் ஆண்டில் அளவுக்கதிமாக மாத்திரை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

அவர் மறைந்தாலும் அவர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் இன்னும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஜாக்சனால் 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 5 குழந்தை நடிகர்கள் மற்றும் 2 நடன கலைஞர்களும் உள்ளனர்.

இதில் ஜேம்ஸ்(James) என்ற சிறுவனை, 100 முறை ஜாக்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் ஜேம்ஸின் 9 வயதில், ஜாக்சன் அவரை ரகசியமாக மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் அதற்கான சான்றிதழையும் வைத்திருப்பதாகவும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராப்சன்(Robson) என்ற மற்றொரு நபரும் ஜாக்சானால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தன்னால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 134 மில்லியன் டொலர்களை ஜாக்சன் வழங்கியுள்ளதாக ஜேம்ஸ் மற்றும் ராப்சனின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

SHARE