சிறுவர் போசாக்கின்மையும் தாய் ஊட்டச்சத்தின்மையும் இரண்டல்ல

82
சிறுவர் போசாக்கின்மையும் தாய் ஊட்டச்சத்தின்மையும் இரண்டல்ல இரண்டையும் ஒன்றாக கருத வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

குழந்தையின் போஷாக்கு மற்றும் தாயின் ஊட்டச்சத்தை தனித்தனியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இரண்டிற்குமே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீட்டு அலகுகளுக்குள் பெண்களை மையமாகக் கொண்ட தலையீடு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மறுபுறம் குடும்ப சுகாதார அலுவலர்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும்,அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக்(விசேட) குழுக் கூட்டத்தில் இன்றைய (24) தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். – ada derana

SHARE