வாக்களிப்பு வீதம் அதிகமாகவுள்ள அதேவேளை சுமுகமான தேர்தல் நடைபெற்று வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
கபே அமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ள சில முறைப்பாடுகள்:
அக்கறைப்பற்று பகுதியில் ஆளும் கட்சியினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் வாகனம் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாகரையில் ஆளும் கட்சியினரால் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் முறுகல்.
ஹல்துமுல்லையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிலர் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சில வாக்குச்சாவடிகளில் ஆளும் தரப்பினர் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.
நாவலப்பிட்டி, கம்பளை நகரங்களில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு.