சிறையிலிருந்து “UNP” முக்கியஸ்தர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவிடுதலை….

750

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையமொன்றில் ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, தன்மீது விதிக்கப்பட்ட கடும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றி பிணையில் இன்று வியாழக்கிழமை (18) விடுதலையானார்.

மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஒரு கோடி ரூபாய் வங்கிப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் மூன்று நபர்களின் (நெருங்கிய உறவினர், அரசாங்க ஊழியர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்) சரீரப்பிணையிலும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 8 ஆம் திகதி விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தார்.

பிணை நிபந்தனைகளை தளர்த்துமாறு அவர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று கடும் பிணை நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அங்கு ஊடகங்களுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து கருத்து தெரிவிக்கையில்,

பத்து மாத காலத்தின் பின்னர் பிணையில் விடுதலையாகி இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நான் நிரபராதி. ஒருநாள் நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்;ள நிலையில் நான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை நன்மைக்கேயாகும்.

இந்தத் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி பெறுவார். நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு படுதோல்வி அடையும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

நீதிமன்றில் இருந்து வெளியேறிய மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து பின்னர் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நகரின் பல இடங்களில் அவருக்கு ஆதரவாளர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டுநாட்டு நாணயமாற்று முகவர் நிலையத்தில் ஆயுத முனையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட் அணிந்து வந்த துப்பாக்கிதாரிகள் குழுவினரால், ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

ரொயிஸ் விஜித்த பெர்னாந்து 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்; மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.UNP-ColomboUNP-Colombo-01UNP-Colombo-02UNP-Colombo-03UNP-Colombo-04UNP-Colombo-05UNP-Colombo-06UNP-Colombo-07UNP-Colombo-08UNP-Colombo-09

1

 

 

0

 

 

0

 

 

0

 

 

 

1

 

 

SHARE