சிவகார்த்திகேயன் சத்தமில்லாமல் மலேசியா சென்றது ஏன்?

312

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ரஜினி முருகன். இப்படத்திற்கு இசை டி.இமான். இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் மலேசியாவில் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது. எல்லோரும் படப்பிடிப்பு என்று தான் இதை பார்த்து நினைத்தார்கள்.

இதற்கு காரணம் இமான் அவர்கள் முதன் முதலாக மலேசியாவில் ஒரு இசை கச்சேரி நடத்தவுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தான் சிவகார்த்திகேயன் மலேசியா சென்றுள்ளார்.

மேலும், இந்த கச்சேரியில் பல சினிமா நட்சத்திரங்கள் பங்குபெறவிருக்கின்றனர்.

SHARE