முன்னாள் ஜனாதிபதியின் அமைச்சரவையில் பணியாற்றிய மூன்று அமைச்சர்கள் மற்றும் கருணா அம்மான் உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வுத் துறை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த நபர்கள் உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் நாட்டை விட்டு வெளியேறிவிடாமல் தடுப்பதன் அடிப்படையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை தனிப்பட்ட வேறு காரணங்களுக்காக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்களா என்பது தொடர்பில் புலனாய்வுத்துறையினர் விசாணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளியேறக்கூடும் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜனாதிபதியின் மேலும் ஒரு சகோதரரான டட்லி ராஜபக்ச இன்று அதிகாலை பெங்கொக் பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.