சீனாவிடமிருந்து 67000 கோடி ரூபாவை கடனாக வாங்கிய மஹிந்த அரசாங்கம்

334
இலங்கை சீனாவிடமிருந்து 67000 கோடி ரூபா கடன் தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இரு தரப்புக்களுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளின் அடிப்படையிலும் கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடாத்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் சீனா விஜயம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு உடன்பாட்டின் அடிப்படையிலேயே அனைத்து கடன்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டது என அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றுக்கொண்ட கடன் தொகைகள் இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த இந்தக் கடன் தொகைகள் உதவியிருக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

SHARE