சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 367 ஆக உயர்ந்தது

415
தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 367 பேருக்கு மேலாக பலியானார்கள். மேலும் 1881 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.இம்மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சோஹ்டாங் எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தால் லாங்டவுஷன் நகரில், கட்டிங்களின் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற சீன அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் தூரம் வரை இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

பூகம்பம் ஏற்பட்டவுடன் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஒடி வரும் வீடியோ காட்சிகளை சமூக வளைதளங்கள் மற்றும் அரசுத் தொலைக்காட்சி ஒலிபரப்பியது நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது.

SHARE