சீனாவில் மண்சரிவு: 17 பேர் மாயம்

449
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 17 பேரைக் காணவில்லை.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஷாவா கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சகதி மற்றும் பாறைத்துண்டுகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்ததால் 17 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். நுஜியாங் ஆற்றங்கரையில் நடந்த இந்த சம்பவம் நடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுமார் 140 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணில் புதைந்தவர்களை தேடி வருகின்றனர். ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். மண் சரிவில் சிக்கிய சிலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

SHARE