சீனாவுடன் எல்லைப்பிரச்சினை குறித்து பேச்சு: சிறப்பு பிரதிநிதியாக அஜித் டோவல் நியமனம்

397
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள எல்லைப்பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சிறப்பு பிரதிநிதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் டோவல், சீனாவுடனான எல்லைப்பிரச்சினைகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகள் செய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கான பணியில் ஒரு பகுதியாக இது இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE