சீனாவை எதிர்க்க துப்பில்லாத அரசு கொரோனா வைரஸிலிருந்தும்,கடனில் இருந்தும் மீள்வது எப்படி?

316

உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சீனா குறித்த சில நாடுகளை தன்வசம் வைத்திருப்பதற்காக கொடிய கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரப்பிவருகின்றது. கிட்டத்தட்ட உலக சுகாதார அமைப்பு கண்டறிந்த வகையில் 193 நாடுகளில் அல்பா வைரசும், 170 நாடுகளில் டெல்டா வகை வைரசும், மியூ (MU) ஐந்து வகை உருமாற்றமடைந்த வைரசுகளும் அவதானிக்கப்பட்டுவந்துள்ளன. தற்பொழுது மியூ வைரஸ் என்பது ஊசிகளுக்கு தட்டுப்படாதவை என்று கூறப்படுகின்றது. இவ்வாறானதொரு சூழலில் சீன அரசு உலக நாட்டிலிருப்பவர்களை கொல்லுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டிருக்கின்றது எனலாம். எது எவ்வாறிருப்பினும் எமது நாட்டையும் எமது மக்களையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அந்த வகையில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அரசியல் புத்திஜீவிகள், சமூக சேவையாளர்கள் அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டிய தேவை தற்போதைய காலகட்டத்தில் உருவாகியுள்ளது. ஒரு காலகட்டத்தில் அனைத்திற்கும் போரை காரணம் காட்டிய இலங்கை அரசு இன்று சீன அரசாங்கத்தினால் திட்டமிட்டு உலகம் முழுதும் பரப்பப்பட்ட கொடிய கொரோனா வைரசை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றது. அதுமட்டுமன்றி குறித்த சீன அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்தும் சமூகங்களிற்கிடையே சமூகத்திற்கு இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது.

இதன் காரணமாக இன்றைய காலகட்டத்தில் உலக வல்லரசுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை பொருளாதாரத்திலும் அதனுடைய வேக வளர்ச்சியிலும் ஸ்தம்பிதமான நாடாகவே காணப்பட்டது. இதனை சாதகமாக கொண்ட உலக வல்லரசுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை ஒரு தளமாக கொண்டு செயற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டார்கள். இன்றைய அதிநவீன உலகில் இலங்கையின் தொழினுட்பவியலாளர்கள் துரிதகதியில் செயற்படுவதனூடாக இலங்கையில் பரவுகின்ற வைரசின் தாக்கம் தொடர்பில் கண்டறிந்து எவ்வாறு இந்த வைரசின் தாக்கம் இலங்கைக்குள் உட்புகுத்தப்படுகின்றது அதனை தடுப்பதற்கான வழிகள் என்ன அவற்றிற்கான தீர்வு அதனோடு உலக நாடுகளின் பார்வை இலங்கையை வசப்படுத்தும் காரணிகள் போன்றவற்றையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும். இலங்கையானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது என்பது பேச்சளவில் மட்டுமே அதன் நடைமுறையில் 30 ஆண்டுகால போர் அதனோடு இனவாத யுத்தம் என பாரியதொரு பிரச்சனைகளை தோற்றுவித்தது. ஒரு நாட்டின் இராஜதந்திர நகர்வு என்பது எமது நாட்டை பாதிக்காத வகையில் இருக்க வேண்டுமே தவிர பரபரப்பை ஏற்படுத்தி அந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் செயற்பாடுகள் இருக்ககூடாது. உதவி என்ற போர்வையில் குறித்த நாடுகளை கடன் சுமைகளுக்குள்ளாக்கி தொடர்ந்தும் மீளா கடனில் அவர்களை அமுல்த்துகின்ற ஒரு செயற்பாடாகவே குறித்த வல்லரசுகள் செயற்படுகின்றன. எமது இலங்கை திருநாட்டை நாம் ஒரு வல்லரசாக மாற்றியமைக்க என்ன திட்டங்கள் இருக்கின்றதோ அத்தனை திட்டங்களையும் நாம் செயற்படுத்த வேண்டும். சீனாவை பொறுத்தவரையில் இலங்கை மீது அக்கறை கொண்டுள்ளது போல் நாடகமாடுகின்றது. அதேநேரம் பிராந்திய வல்லரசுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதற்கு சாதகமாகவே இலங்கை தீவை தேர்ந்தெடுத்துள்ளது சீனா. இலங்கையின் கரையோர பகுதிகளை தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாண தீவுகளில் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற சீன நிறுவனங்கள் அதன் பின்புலமாகவே தமது அரசியல் இராஜதந்திரங்களை நகர்த்தி வருகின்றது. ஒரு நாட்டுக்குள் சொல்லப்போனால் மதவாதம் இனவாதம் தேசியவாதம் இதனை வைத்தே அரசியல் இடம்பெறுவது வழக்கம். ஆனால் ஒரு நாட்டை இராஜதந்திர ரீதியில் சுபீகரித்துக்கொள்வது என்பது அந்த நாட்டின் பல பகுதிகளையும் விலைக்கு வாங்குவது என்பது ஒரு நாட்டை அபகரிக்கின்ற செயற்திட்டமாகும். கடந்த 60 வருட காலமாக இலங்கை இந்திய நட்புறவு என்பது அதனுடைய அன்டைய நாடு என்ற வகையில் பாரிய பங்களிப்பாகவே இருந்துவந்தது. மீண்டும் இந்தியா இலங்கையில் போராட்ட குழுக்களை வளர்த்தெடுக்கின்ற ஒரு நிலைமையை உருவாக்கும். காரணம் என்னவென்றால் அதைவிட இந்தியாவிற்கு வேறு வழிகள் இல்லை. விடுதலைப்புலிகள் அல்லது ஏனைய ஆயுத குழுக்கள் பலம் பொருந்தியதாக இருந்தது இந்தியா தான். அவர்களே ஆயுத பயிற்சிகளையும் கடந்த காலங்களில் வழங்கியிருந்தனர். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முதலில் வீழ்ச்சியடைய செய்தால் மட்டுமே அந்த நாட்டின் சொத்துக்களை அபகரிக்க முடியும். சீனாவால் பரப்பப்பட்ட குறித்த வைரசை அழிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். 2 அயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இலங்கையில் பணிபுரிகின்றனர். இவர்கள் யார் என்பதும் இவர்களுக்கு தெரியாது.

உண்மையில் இவர்கள் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக நாட்டில் களமிறங்கியிருக்கின்றார்கள். இலங்கை தீவில் கட்டடங்களை நிர்மானிப்பது போன்று பாலங்களை நிறுவுவது போன்று பாதைகளை செப்பனிடுவது போன்று பணியாற்றும் இந்த பணியாளர்கள் சந்தர்ப்பம் சூழ்நிலைகளை பார்த்து இந்த நாட்டில் ஒரு சதி புரட்சியை ஏற்படத்தும் வகையில் இவர்களின் செல்வாக்கு வளர்ந்துவருகின்றது. சீன வங்கிகளும் இலங்கை திருநாட்டில் தற்பொழுது திறப்பதற்கான நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. இலங்கை நாட்டுக்குள்ளேயே சீனாவின் பணம் செல்லுபடியாகும் என்ற ஒரு நிலைப்பாடு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காலப்போக்கில் நிலைமை அவ்வாறு தான் மாற்றப்படும். ஒரு நாட்டில் பொருளாதாரமும் அதன் கையிருப்பும் சரியாக இருந்தால் மட்டுமே அந்த நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். பல பொருட்களுக்கு இறக்குமதி தடையை விதித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் எவ்வாறு அதனை மீள கட்டியெழுப்புவது என்பது பற்றி சிந்திக்கவில்லை. இதனால் பல நாடுகள் தற்பொழுது அரசாங்கத்தின் மீது சீற்றம் கொண்டுள்ளன. உதவி கரங்களை எழுப்ப மறுக்கின்றன. சீனாவை எதிர்க்க முடியாத ஒரு சூழலில் அவர்களின் கையை எதிர்பார்க்கும் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. மக்கள் போராட்டம் என்பது மகத்தான போராட்டம் சீன நாட்டை மக்கள் இலங்கையில் எதிர்க்கும் பொழுது இங்கு அவர்களுக்கு எந்த தேவையும் ஏற்படாதுபோகும். சீனாவுடன் செய்த ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும். இதனால் சீனா பலிவாங்கும் செயற்பாட்டை ஆரம்பிக்கும். இலங்கையில் சீனாவின் அபிவிருத்திகள் அனைத்தையும் முடக்கி அவர்களை நிராயுதபானிகளாக அனுப்புவதன் மூலம் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பமுடியும்.

குறிப்பாக விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மலுங்கடிக்கவும் அவர்களை இல்லாது ஒழிக்கவும் குறிப்பாக 2000 – 2005 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் புடவை விற்பவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் புடவை வியாபாரம் செய்தார்கள். இவர்கள் இந்தியாவின் ரோவை (சுயற) சேர்ந்தவர்கள். இவர்கள் தமது புலனாய்வு நடவடிக்கைகளினால் இலங்கையின் அனைத்து பாகங்களையும் வரைபடமாக்கிக்கொண்டனர். இந்தியாவின் ரோவை சேர்ந்த பலர் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கியதும் நாம் அறிந்ததே. அதன் காரணமாக விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் தப்பித்துக்கொண்டார்கள். எதிர்வரும் நாட்களில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சீனாவின் நட்புறவை துண்டித்தால் மட்டுமே தொடர்ந்தும் சீனாவினால் அனுப்பப்படும் வைரஸ்களை எம்மால் எதிர்கொள்ளமுடியும் என்பதே இன்றைய யதார்த்தம்.

SHARE