சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டை சந்தையில் விற்பனை!

17

 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை புறக்கோட்டை மொத்த வியாபார சந்தையில் முதல் முறையாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று(01.04.2024) முதல் சீன பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பண்டிகை காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோர் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை தட்டுப்படின்றி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கு தடை
இந்த சீன வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 320 ரூபா எனவும் இந்த வெங்காயம் நல்ல நிலையில் காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்தே இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சீனாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE