சீன வெடி விபத்தில் 44 பேர் பலி….500 பேர் படுகாயம்: அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)

252
சீன ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதுடன் 500க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று மாலை டியாஜின் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் இரண்டு பயங்கர வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகி இருப்பதுடன் 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த செய்தி நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட 12 தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த கட்டிடங்களும் சரிந்து விழுந்ததால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

விபத்து நடந்தபோது கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், சுற்றுவட்டாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும், சில கட்டடங்களில் கண்ணாடிகள் உடைந்து விழுந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE