சுகாதார அமைச்சருக்கு எதிராக களமிறங்கியுள்ள பொதுபல சேனா

415

நாட்டின் உழைக்கும் மக்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசியல் செயற்பாடுகளை அழிக்கும் ஒப்பந்தம் பொதுபல சேனா அமைப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் முதல் கட்டமாக சுகாதார சேவையின் சிற்றூழியர் சங்கம் என்ற அமைப்பு நேற்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள ஊழலான நிலைமையை போக்குவதற்காக அந்த துறையின் கீழ் மட்டத்தில் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுபல சேனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக கூறப்படும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்படும் நோக்கிலேயே இந்த தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE