சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக்காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது: ஜனாதிபதி

316
சுகாதார அமைச்சின் அதிகாரிகளைப் போன்று ஊழல் மோசடிக் காரர்கள் வேறு நிறுவனங்களில் கிடையாது என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

மஹரகம இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுயாதீனமான சுகாதார சேவை ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தடையாக அமைந்திருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் கோரினார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் சுகாதார சேவை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

தேவையான அளவு மனித வளத்தை வழங்கி நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE