சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு [ புதன்கிழமை, 29 யூலை 2015, 05:15.22 AM GMT ] ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரையில் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி மத்திய செயற்குழுவினை கூட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.