இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 13 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையின், சிறைச்சாலை அத்தியட்சர் ஏ.பிரியங்கர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூன்று பெண் 10 ஆண் சிறைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை அதிகாரி எஸ்.மோகனராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.