சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு

396

 

சுமார் ஐந்து கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருதனார்மடம் சந்தை கடைத்தொகுதி திறப்பு விழா இன்று சனிக்கிழமை நண்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஆலயத்தில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இதையடுத்து கடைத் தொகுதியை வலி.தெற்கு பிரதேச சபையின் தலைவர் தி.பிரகாஸ் திறந்து வைக்க நினைவுப்பலகையை உப தலைவர் பரமேஸ்வரலிங்கம், செயலாளர் எஸ்.தியாகச்சந்திரன் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தார்கள்.

image_handle (2) image_handle (3) image_handle (4) maruthanarmadam market 6557

தொடர்ந்து வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மரங்களை நட்டு வைத்தார். வலி.தெற்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.பரமேஸ்வரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஜங்கரன், வலி தென்மேற்குப் பிரதேச சபைத்தலைவர் கே. மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SHARE